அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

எதுவோ....

அதுவும் சாகவில்லை;
இதுவும் சாகவில்லை...
பொதுவில் எதுதான் செத்ததென்றும்
எவர்க்கும் தெரியவில்லை.

என்றாலும்
செத்தது நிச்சயமாய்ச் செத்ததென்றார்
சென்ற அத்தனை திக்கெல்லாம்

அங்கே இப்படி செத்ததென்றார்,
இங்கே அப்படி செத்ததென்றார்....
செப்படி வித்தைபோல
செத்ததே சிரம் முளைக்கக்கண்டார்.

எப்படி சாத்தியமென்றால்,
ஈர்மூன்றாறு என்னுமாற்போல,
எல்லாமே சாத்தியமாம்.

பூசலார் கோவில்களில்
பொழுதெல்லாம்
பிரதிஷ்டை.

செத்ததும் சிறிது செழிக்கும்;
செழித்ததும் சற்று இறக்கும்.

முளைக்கும் பூண்டும்
அறுவடைக்கு.

08, நவம்பர், 99

0பின்னூடுகை:

Post a Comment

<< Home