அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

An Entity formerly known as an entity formerly known as a Human is currently known as a Human

அவனின் கிரகத்திலும் அழுந்திக்கிடக்கும் துருவம் இரண்டு.
துருவம் இல்லாத மனிதத்தெருக்களை யாராவது காட்டக்கூடுமா?
அவனுக்கும் இருந்தன அந்தங்களி லிரு துருவம்

துருவங்கள்;
ஒன்று, நுனி தனிய நனையத் தூங்கும் பனித்துருவம்;
அடுத்த துருவத்தை அடுத்து,
காலிக் கிடக்கும் சூரியக்ஹீலியம்.

பனி உருக்கத் தீயும்
தீ தணிக்கப் பனியும்.

யாருக்குத்தான் இல்லை,
தனிக்கிரகங்களும் பனித்துருவங்களும்?
இருக்கட்டும் அவனுக்கும்
குறைந்தது இரண்டு,
பனி ஒன்று; அக்கினி வேறொன்று.

~~~~~~~~~

மரபணு நிறமூர்த்தப் பிணைவுகளின்
இணைப்பும் பிரிகையும்
முனை முறுக்க முறுக்க
முகம் முறுவலித்துக்கொண்டன.

~~~~~~~~~

அவனுள் இருந்தான்,
ஒரு மனிதன்.

-/
17 ஜூன், '00 சனி

0பின்னூடுகை:

Post a Comment

<< Home