அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, July 02, 2023

கவிதையெனக் கொள்ளற்க!

ஊழ்க்கதையைச் சொன்னாலும் தமிழ்த்தேசியம்!

ஊர்ப்புத்தகத்தை எரித்தாலும் தமிழ்த்தேசியம்!

பிரெஞ்சுப்பொலிஸ் சுட்டாலும் தமிழ்த்தேசியம்!

பாரிசுத்தெருவைக் கொளுத்தினாலும் தமிழ்த்தேசியம்!

மட்டக்கிளப்பில் நாய்துரத்தினாலும் தமிழ்த்தேசியம்!

யாழ்ப் பானத்தில் வெறியேத்தினாலும் தமிழ்த்தேசியம்!

மாவை சேனாதிராசா மப்படிச்சாலும் தமிழ்த்தேசியம்!

சிவசேனை பசு அணைத்தாலும் தமிழ்த்தேசியம்!

மாமன்னன் பன்றி துரத்தினாலும் தமிழ்த்தேசியம்!

பைடனுக்கு பைபாஸ் செய்தாலும் தமிழ்த்தேசியம்!

பூட்டினுக்கு வாக்னர் காட்டினாலும் தமிழ்த்தேசியம்!

இதுநாள் விட்ட சுற்றம், சுட்ட குற்றம் 

ஏதும் நமதில்லை; நுமதில்லை! காண்! காரணம்,

காலைச் சுற்றிய விடக்கொடித்தமிழ்த்தேசியம்!

இதுவாய், தமிழ்த்தேசியம் அத்தனாய்,

தமிழ்த்தேசியமல்லா அத்தனையுமாய், 

புல்லாகி,  பூடாய், புழுவாய், மரமாகி, 

'பல்'மிருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், 

கவிஞராய், கதைசொல்லியாய், கொம்யூனிஸ்டாய்

எல்லாநிறப்பிறப்பும் பறப்பும் புரட்டிப் புரட்சியாய்ப்

பிறந்துளைந்த சொல்லால் வல்ல

சோதியரையும் சோதரரையும் 

பொல்லாவினையிருந்து வல்லதாட்சியாய்க் 

வலி தாங்கிக் காத்திருக்கும்!

கடவுளில்லையென்பான் வாழ்வு

தான் இல்லாக்கடவுளிலே கல்லூன்றிக் 

காட்சிக்காய்க் கட்டியெழுந்து கதை பரப்பும்!

1 ஜூலை 2023