அலைஞனின் அலைகள்: கணம்

Monday, May 11, 2020

பொது மூலதனம்


எல்லாத்தத்துவங்களுக்கும்
திருநிலைப்படுத்தலுண்டு.
திருநிலைப்படுத்தலென்றால்
ஆண்டகையாக்கல்.
ஆண்டகையென்றால்
மூலமூர்த்தி
மூர்த்தி மூலமோ பூராடமோ
பேசவே பேசாது.
மூர்த்திக்கு ஜலம் வார்க்கும்
குருக்கள் பேசலாம்.
குருக்களென்றால்
இடைத்தரகர்
இடையில் தரகர்
பிறகு தலைவர்
மூர்த்தியின் கீர்த்தியே
தலைவர்தம் உரை.
ஆண்டகைப்படுத்தலை அவ்வப்போது
மீளச்செய்வதும் தலைவர்
தலைவரின் முதலென்பதால்
மூர்த்தியே முதல்வர்
பொதுத்தத்துவங்கள்
பொதுவுடமைத்தத்துவமென்றாலும்
திருநிலைப்படுத்தலால்
தனிச்சொத்தாகும்.
புத்தர் பேசவாய்திறவார்
எங்கல்சும் எனக்கேன் சோலி என்றிருப்பார்.
தலைவரே பேசுவார்;
பேசுகிறவரே தலைவர்;
சந்தியவந்தனத்துக்கும்
வைகாசி ஒன்றுக்கும்
கருவறை உள்ளே தனியே
வெளியே காத்திருப்பார் காண
ஜலம் வார்ப்பதால்
தீபம் காட்டுவதால்
தலைவரே
திருநிலைப்பட்டார்க்காய்
பிராதும் பெட்டிசனும்
பெருவழக்கும் தொடுக்க
உரித்துடையார்.


திருநிலைப்பட்டார் நூல்கள்
தேவமுறிகள் கட்டப்பட்டவை;
காவலர் தோட்காவவும்
தலைவர் பாஷ்யம் விரித்துரைக்கவுமே
நுமக்கும் நமக்கும்
விலக்கப்பட்ட புழுக்கனிகள்!


5/7/2020 வியா 8:57 கிநிநே

சுட்டும் சுடர் விரல்


நமக்குச் சுட்டுவிரல்தான் பிடித்திருக்கு.
வெளிர்பச்சைவெண்டிக்காயென்றே
ஒரு சுண்டங்காய்ப் பெயர் வச்சாப் போச்சு!
அடுத்தென்ன! விரலாராதனைதான்!


அச்சா விரல்!
நகமென்றால், பிறை பார்!


பக்குவமாய் வாய்க்குள் வச்சால்,
சூப்புவமா? கடிப்பமா?
ஆருக்குத் தேவை எச்சில் ஆராய்ச்சி?


சுட்டுவிரல் வேணும்
சுடவும் காண்!
மெத்தப்படித்தவிரல்
சுட்டுது பார்!
மொத்தத்தகு
அச்சா விரல்!


சூரியன் கிடக்கட்டும்!
பார்த்தால் கூசுது! பட்டால் எரிக்குது!


விரல் தன்னிலை;
வெயிலோன் படர்க்கை.


04/27/2020 திங். 13:08 கிநிநே

என்றேன்.. என்றார்


எழுதுவதில்லையா?” என்றேன்
எழுவதில்லை,” என்றார்

இழந்ததை…” +
-“
வரவுக்கா?”

வருவதை…” +
-“
இழப்பதற்கா?”

முடிந்ததை…”+
-“
முடியாது!”

மாலை மறந்து
பல கதை பேசினோம்.

நீடித்தது இரவு.

12/03/2019

அலட்டல்


தயார்படுத்திப் புளித்த தயிராய்
எல்லாம் மலிந்துவிட்டன:
ஆண்டவர் ஆண்டகை
ஆயுதம் ஆறுதல்
ஆலோசனை ஆத்திரம்
ஆரிவன் ஆண்டுத்திவசம்
அடுத்தவள் அடுத்தவெடி
அறம் அச்சம்
அகதி ஆக்கினை
ஆட்சி அவலம்
ஆறுபந்திக்கட்டுரை
அரைத்தகவிதை
மீள மீளாச்சுழிப்பு
அ!
ஆ!


2019 nov