துயரை அளக்க எது அளவீடு?
துயரை அளக்க எது அளவீடு?
துயரை அளக்க எது அகாலம்?
துயரை அளக்க எது துயில்குழி?
துயரை அளக்க எது என்னிடம்?
வெப்பக்காற்றான மூச்சு
விழைகடனாய் உள்ளிழுத்து
வெற்றுச்சொற்சூது துப்பும்
சூழ்வெளியின் அலகு எது?
மொழிக்கான துயரை - ஈன்ற
மொழியே தின்னட்டும்.
உளத்
துயர் அளப்பது நிசப்தம்! உயிர்
அகன்ற காரிருள் நிசப்தம்
2022