அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, April 28, 2018

பற்றவை


பற்றாத
நெருப்புக்குச்சொன்று
படுத்தி வைத்தேன்
பற்ற வைத்து
இடம் கிடத்தி
கூர்ப்பென்சில் வைத்தாய்
விலக்கி, இடம் பொருத்திப்
பச்சைமூங்கிற்பிரம்பொன்று
வைத்துப் பெரிதென்றேன்.
பாகை மேசை சுற்றிப்போய்
நேர்கோட்டெதிரியாய்
இடம் வலம் சுழி மாற்றுகிறாய்.
நீ கடிக்கும் பாம்பு
இடம் போனாலென்ன?
வலம் ஊர்ந்தாலென்ன?
கை வளப்பட்டது
நா வாலாயமானது.
9 மே 2017

துணிகளைக் கழற்றிப் போடுங்கள்

துணிகளைக் கழற்றிப் போடுங்கள்
எழுத்துகளும் எண்ணங்களும்
உடை கழற்றி வெளுத்துப் போய்
அலையுமென்றால்
அவை காவும்
ஆட்களுக்கேன் ஆடை?
உங்களுக்குக் கஷ்டமென்றால்
துணிகளைக் கழற்றிப்போடுங்கள்
முகத்தை மூடுவதும் பிரச்சனை
இடுப்பை மூடாததும் பிரச்சனை
என்றால்
கழற்றிப்போட்ட துணியில்
கட்டித் தொங்குங்கள்
உங்கள் கொக்குக்
கழுத்துகளை
துணிவாகத்
துணிகளைக் கழற்றிப்போடுங்கள்
சுழற்றிக்
கழற்றிப்போட்ட துணிகள்
கலந்து காயும்
தமக்குள் வெப்புக்
கலக்கமோ காயமோ இன்றி
.
.
.
4/28/2018

அக்கரைத்தெருநாய்

அடுத்தாள்
பருப்பங்களையும் பருப்புகளையும்
அடி தடவுவதில்
தான் வளர்கிறது
அக்கரைத்தெருநாய்
கணியத்தரமென்று
தன் நடுவிரற்கடைநீளத்தால்
ஆழங்களையும் அகலங்களையும்
மீளப் புண் நோண்டுகிறது
வீடு பேதம் பிரியாது
சமைத்தாள் தட்டின்
உணவெல்லாம்
உரித்துக்கொண்டாடுகிறது
தானிட்ட பக்குவமாய்
இத்தெருச்சுவரெல்லாம்
தான்
தூக்கின கால்
பாய்ச்சின நீர்
வெடுக்கை முன்னிறுத்தி
தனதென்கிறது
என் தெருவை
அப்பால் அதன்
பின்னங்காலிடை தொங்கு
வாலுக்குப் பின்னால்
இளைக்க ஓடுகிறன
ஞானப்பாலுக்கேங்கும்
பூனைமயிர்த்
தவ்வல்கள்
கொள்
மாதிரிக் கொன்றி ரண்டாய்
எல்லோர் உள்ளாடைகளையும்
கௌவிப்போயிருக்கின்றது
அண்டைத்தெருநாய்!
ஊருக்குள்
அம்மணமாய் ஆளிருக்க
அத்தனையும் மொத்தமாய்
ஆச்சிரமம் உருவிப்போகிறது
அயோக்கியம்!
சுத்தம்!
பரிசுத்தம்!
.
.
.
04/27/2018


 
Statcounter