வெற்றிடம்
வெற்றிடம் என்பதைக் குப்பை கொண்டு நிரப்பலாம்
அடையாளவறுமையை அடையாளிகள் முடுக்கலாம்
தத்துவசூனியத்தைத் தம்மெதிர்ப்பால் முழுக்கலாம்
பித்தென்பதே பெரும்புலமையெனத் தக்கவைக்கத்
தேவை,
ஒற்றை அறை; பத்துப்பேர்; இரட்டை ஒலிவாங்கி;
அட்டமச்சனிகாலை!
தரிகணத்து உணர்மோப்பத்தில்
தானியங்கிக் கதவு திறக்க, கைக்கெட்ட
வைத்த நெகிழிக்குடத்துத்தலைச்சுழி அமுக்கிப்
பிதுக்க,
பிரிந்து சொட்டுது பார் அடுத்த தலைமுறைக்கான
அச்சாத்தத்துவம் பச்சை மின்ற் பாயச்சட்னியோடு!
கழிப்பறை அந்தப்பக்கம்,
இடதோ வலதோ
எதேஷ்டம்,
உம்மிஷ்டம்!
நீர் எறிய விண்ணோக்கிப்
பாயுது பார்
சிறு சிட்டுக்குருவி விடுதலை!
06/01/2023