அலைஞனின் அலைகள்: கணம்

Friday, October 13, 2023

பற்குத்திப்பெறுதி

 பெட்டி பல்லுக்குத்தி,

டொலர் ஒன்று!

பிரித்தெடுத் தொன்றை,

வேட்டைப்பல்லிடைச்சிக்கிய

மச்சமுள்ளைக் குடைந்

துடைத் தெடுத்துப் போட்டேன்,

இரத்த விளாறுடன்

தரை.

தத்துவ அரசியல்முடுக்கு

மொட்டுச் 'சி'டுக்குக்கவிதை

பத்தைவிட

பற்பயனுக்கு சத்தானது,

பத்திலொரு சதத்துப்பற்குத்தி!

 

10/13/2023 வெள் 19:35 கிநிநே

முப்பது வெள்ளித்துண்டங்கள்!

சுட்டிப் பெற்றவனை வெட்கப்படுத்திக் கொன்ற முப்பது வெள்ளிக்காசுகள்! குற்றம் சொன்ன குருக்கள் பெற்று விட்ட காசு பெற்ற நிலம் குயவர்வயல்!

 

முப்பது வெள்ளிவிதை முளைத்துப் பஞ்சாய் இலவு வெடித்துப் பரந்து எட்டுத்திசையும் எண்ணவொணாத்தேசத்தே விட்டு முளைத்த விழுது;

விழுது, குருதியுறைபெற்றமண்ணில் வெள்ளிகுட்டிபோட்ட வட்டியுடன் விழுது!

விழுது, பிய்த்த சதையில், பேய்தின்னப் பிணத்தில், சத்தமின்றிப் புத்தகமாய் முளைத்த வெள்ளி!

விழுது, சுட்டவனின் மொட்டை மாமன் ஒட்டடை தட்டும் தூசுக்குப் பட்டுமேல் துட்டு வைத்துத் தாங்கும் தாம்பாளக் குட்டி வெள்ளி!

குயவர்வயல் முப்பது காசு ஆரம்பித்த ஒரு வெள்ளிப்பெருக்கல்விருத் தியாகி உத்தமருக்கும் குருக்களின் சிலுவை சுமவென்று அலையும் சிலந்திவலை.   

8/4/2023 வெள்ளி 20:50 கிநிநே

melting pot

 

On a stormy hot night, I reclined and dreamed:

Dali asked me to pick between Picasso and Kokusai

I chose him on the spot! At least,

Melting time is easier than searching body parts!

7/5/2023 1:52 EST

அடையாளிகள்


இல்லா ஒன்றைச் சுற்றிச் செக்கோட்டி
எண்ணெய்ச்சக்கை கக்கும்
அத்தனை பாவத்துக்கும் அவிந்து
செத்தார்மீது சிலுவை முள் ஏற்றும்
உங்கள் இல் பாழ்கிணறுதான்
உலகின் அகலமும் ஆழமுமான
சுழிப்பேராழி! குறுக்கே
எம்பித் தாவுங்கள்!
அபத்தமான தூரத்தில் - கால்
அகப்படும் விடுதலை

விலங்கு
ஒடியாது!

7/4/2023 22:51 EST